×

கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தையை முதல்வராக்க வேண்டும்: சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தையை முதலமைச்சராக்க வேண்டும் என சித்தராமையாவின் மகன் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 117 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 76 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர். தலைவர்களைப் பொறுத்தவரை வருனா தொகுதியில் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் இருந்து வருகின்றனர். சிகோன் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். சிக்மகளூர் தொகுதி பாஜக வேட்பாளரான தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவை சந்தித்துள்ளார். இதனிடையே இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா; “ பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். கர்நாடகத்தின் நலன் கருதி எனது தந்தை சித்தராமையை முதலமைச்சராக்க வேண்டும்” என்று கூறினார்.

The post கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தையை முதல்வராக்க வேண்டும்: சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Yadindra Sidaramaiah ,Sitaramaiah ,Bengaluru ,Sidderamiah ,Karnataka Assembly ,Siddaramaiah ,Yadindra Siddaramaiah ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்